Monday 28 January 2013

சிரி …..சிந்தி


# 150 சி.சி பைக்கில் ‘பிக்-அப்’ சரியில்லை என நண்பன் குறைபட்டுக்கொண்டான். பிறகுதான் புரிந்தது – அவன் பைக்கைப்  பற்றிக் கூறவில்லை என்று.

# நாடகத்தில் ‘கணவன்’ வேடத்தை மறுத்து விட்டேன் – ஏதாவது வசனம் பேசுற மாதிரி வேடம் கொடுங்க சார்.

# ’இரட்டை அர்த்த வசனம் எழுதுவதில்லை’ என்ற வசனகர்த்தாவின் வசனங்களைப் படித்துப் பார்த்தேன் – எல்லாமே பச்சை!

# என் தோழி தபால் மூலம் ஏதோ பயில்வதாய்ச் சொன்னாள் – பிறகுதான் தெரிந்தது அது ‘நீச்சல் பயிற்சி’ என்று.

# நண்பன் கடுகடு முகத்தோடு மாத்திரை சாப்பிடுகிறான் – ‘கண்டிப்பாக’ மாத்திரை சாப்பிடச்சொன்னாராம் டாக்டர்.

# கூட்டணித் தலைவர்கள் பெரும்பாலான முடிவுகள் எடுப்பதற்கும், பெரும்பலான முடிவுகள் எடுப்பதற்கும் நிறைய வித்யாசங்கள் உள்ளன.

# இதுவரை நான் பார்த்ததில் நடிகர் கமல்ஹாசனின் மிகச் சிறந்த படைப்பு ------ ’ஏழாம் அறிவு’ திரைப்படம்தான்.

# பல திருப்பங்கள் கொண்ட படம் ஒன்று பார்த்தேன் – ஹீரோ பல சந்து பொந்துகளில் திரும்பி திரும்பி ஓடுகிறான்.

# படத்தின் க்ளைமாக்ஸ் காட்சியில் ஹீரோவின் அத்தை வருவதைத்தான் ‘ஆண்ட்டி- க்ளைமாக்ஸ்’ என்றாரோ இயக்குநர்?

# ’சென்னைக்கு வந்தபோது என் பாக்கெட்டில் வெறும் 50 ரூபாய்தான் இருந்தது’ என்று பேட்டி தந்தார் தொழிலதிபர். (பெட்டியில் 5 லட்சம் ரூபாய் இருந்ததை சொல்லமாட்டாரே!)

# திரையுலக வாழ்க்கையில் இதுவரை 30 முறை விபத்து நடந்ததாய் பேட்டியில் சொல்லும் ஹீரோ , இதுவரை 300 அழகிகளுடன் ஆடிப் பாடியதை ஏனோ மறந்து விடுகிறார்.

# ‘ஏய் கவி……… என்னை ‘மாமா’ன்னு கூப்பிடாதே! ‘அண்ணா’னு சொல்லு” – வயதை மறைக்க படும்பாடு இருக்கே!

# தோழி அதிகம் லிப்ஸ்டிக் பயன்படுத்துவதைக் கேட்டால் ‘வாய்மையே வெல்லும்’னு அரசே சொல்லுதே என்கிறாள்.

# இசை ரசிகர்களுக்கு – கஜல்; திரை ரசிகர்களுக்கு – காஜல்.

# டீ கடை போர்டில் அமலா பால் படம் – என்ன பொருத்தம்!

# காலை 5.45 மணிக்கு இலங்கை வானொலியில் ‘புலரும் பொழுது’
மலர்களில் ஆடும் இளமை புதுமையே’ – கல்யாணராமன் படப்பாடல்
பாதி தமிழர் நினைவில் மலர்கள் – மீதி தமிழர் நினைவில் ஸ்ரீதேவி.

#காலை 5.00 – சூரியன் பண்பலை பாடல்
5.30 – ஃபாஸ்ட் ட்ராக் கால் டாக்ஸி பயணம்
6.30 – தினகரன் படிப்பு
7.30 – ஸ்பைஸ் ஜெட் விமான பயணம்;
லேப்-டாப்பில் ‘ரெட் ஜயண்ட் மூவீஸ்’ படம்
10.30 குங்குமம் படிப்பு
பகல் 12.30 ஆன் லைனில் ‘ஆனந்த விகடன்’
2.30 சென்னை சூப்ப்ர் கிங்ஸ் கிரிக்கெட் போட்டி
மாலை 5.30 தமிழ் முரசு தலைப்புச் செய்திகள்
இரவு 7.30 ‘மிருதங்கம்’ ‘திருமதி பிச்சை’ ‘பித்தளை’ –
சன் டிவி நெடுந்தொடர்கள்
9.30 ஏர்செல்லில் உரையாடல்
10.00 சன் டைரக்டில் ’சன் பிக்சர்ஸ்’ படம்
ஆ………………………..கருணாநிதி குடும்பத்திற்க்கு கடன்பட்டோமே!

# இலங்கை தமிழர்க்கு ராஜபக்சேவின் புதிய வானொலிச் சேவை
இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம் மரண அறிவித்தல்      கள் சேவை”

#                                              தைரியசாலி
என்னங்க………….ஏன் பாதி சாதத்தை கொண்டு வந்துட்டீங்க’ – மனைவியின் கூப்பாடு.
மதியம் மீட்டிங்ல டீ, பிஸ்க்கட் சாப்பிட்டேன். அதனால் நீ தந்த சாதத்தை முழுதும் சாப்பிட முடியல.’
மங்கையர் வாய்ஸ்’ நிகழ்ச்சி பார்த்து ‘பன் சாதம்’ செய்தேனே’
அதோட மதியம் ஸ்டெனொ தந்த தீபாவளி லட்டு வேற சாப்பிட்டுட்டேன்’
டிவி பார்த்து ஆசையா செய்து கொடுத்தா இப்படி மிச்சம் வைக்கறீங்களே”
(டிவி ஒழிக என சபித்தபடி) ‘வயிறு சரியில்ல……..அதான் சாப்பிட முடியல’
வேலை மெனக்கிட்டு ‘பன் சாதம்’ செய்தேன். அதைக்கூட சாப்பிட மாட்டீங்களே”
அழுகை சீரியலை நிறுத்தும் விதமாய் ‘அடடா …. ஸ்ட்டமக் அப்செட்’ என்று சமாதானம் செய்தேன்.
மீண்டும் மனைவியின் கூக்குரல் – ‘டேய் சின்னவனே…………….ஏண்டா சாதம் மீதி வைத்தே?”
5 வயது மகன் ‘டோரிமான்’ பொம்மையுடன் நேராய் அம்மவிடம் சொன்னான் – ‘அய்யே… பன் சாதம் நல்லாவே இல்ல!’

# ப்ரியா படம் பார்க்கும்போது ஸ்ரீப்ரியா ஞாபகமும் , ‘தேவி………….ஸ்ரீதேவி’ பாடல் பார்க்கும்போது ஸ்ரீதேவி ஞாபகமும் வந்தால், நீங்கள்தான் தமிழ்த்திரை ரசிகர்.

 

         

விஸ்வரூப ஆசைகள்



                     விஸ்வரூப ஆசைகள்
1980ல் வெளிவந்த படத்தின் பெயரும் ’விஸ்வரூபம்  ’தான் என்று பலருக்கு தெரிய வாய்ப்பில்லை. படத்தின் தலைப்பைக் கூட சுயமாக யோசிக்க முடியாதவர்களின்  சமீப சேட்டைதான் இஸ்லாமியர்      க்கு     எதி ரான ‘வி      ஸ்வரூபம்’.
சோ ராமசாமி (முகமது பின் துக்ளக்), மணிரத்னம் (பம்பாய்), .ஆர்.முருகதாஸ் (துப்பாக்கி) வரிசையில் மற்றுமொரு முஸ்லிம் எதிர்ப்புப் படம்தான் விஸ்வரூபம்.
இஸ்லாமியர்க்கு எதிராக படம் செய்து அகில இந்திய & சர்வதேச சினிமா மார்க்கெட்டில் படத்தை போணி செய்யும் உத்திதான் இந்த சினிமா வியாபாரிகளின் நோக்கம். இவர்களின் பண ஆசைக்கு தமிழ்நாடு ஏன் பலிகடா ஆக வேண்டும்?
இங்கு தமிழரிடையே இந்து-முஸ்லிம் பேதம் கிடையாது. தமிழர்கள் இந்து என்றால் இலங்கையில்  2 லட்சம் தமிழரை டில்லி ராஜாங்கம் அழித்திருக்குமா
இந்து தீவிரவாதம் (பாபர் மசூதி இடிப்பு), கிறிஸ்துவ தீவிரவாதம் (ஆப்கான் போர்), யூத தீவிரவாதம் (பாலஸ்தீன போர்), பவுத்த தீவிரவாதம் (ஈழத்தமிழர் படுகொலை) என தீவிரவாதம் எல்லா மதத்திலும் பரவிக் கிடக்க ஏன் இஸ்லாமியர்க்கு மட்டும் ’  தீவிரவாதிகள்’ எனும் பட்டம்?
இந்து-முஸ்லிம் பேதம் உள்ள வட இந்தியாவில் படத்தை ‘டப்’ செய்து காசு பார்க்கத் துடிக்கும் வியாபாரிகளின்  பேராசைக்காக தமிழ்நாட்டில் ஏன் பிளவு ஏற்படுத்த வேண்டும்? வட இந்திய ரசிகர்களுக்காக இந்தி நடிகைகள் (காஜல் அகர்வால், மனிஷா கொய்ராலா, பூஜா பட்) இந்தி பாடகர்கள் (சுக்விந்தர் சிங், உதித் நாரயண், ஷ்ரேயா கோஷல், சாதனா சர்கம்) என தரம் தாழ்த்திக் கொண்ட தமிழ் திரையுலகத்தின் அடுத்த வீழ்ச்சிதான் வட இந்தியாவுக்காக கதை பண்ணுவது (பம்பாய், துப்பாக்கி, உயிரே, ரோஜா, ஹே ராம் ……….. விஸ்வரூபம்).
இவர்கள் படம் அமெரிக்காவிலும், ஐரோப்பாவிலும் காசு பண்ண நமது தமிழ்நாட்டில் ஏன் பிரிவினையைத் தூண்ட வேண்டும்? அந்த நாட்டு மக்களை குஷிப்படுத்த நாங்களா பலிகிடாவாக கிடைத்தோம்? ஐரோப்பிய சர்வதேச படவிழாக்களில் படம் தேர்வாக வேண்டி நம் தமிழ் சமுதாயத்தை பிளவு படுத்த வேண்டாமே!
தீவிரவாதம் குறித்து வரும் படங்களை தமிழ்நாடு அரசு தடை செய்ய வேண்டும். அல்லது தமிழ்நாடு அரசின் முன் அனுமதி (கதையை பரிசீலித்த பின்னர் படப்பிடிப்பு ) பெற்ற பின்னர் படம் எடுக்க சட்டம் இயற்ற வேண்டும். அதே போல் ஆபாசம், தீவிரவாதம் போன்ற கதையம்சம் கொண்ட இந்திப் படங்களையும் தமிழ்நாட்டில் தடை செய்ய வேண்டும்.