Thursday 7 March 2013

ரயில்வே பட்ஜெட் 2013 RAILWAY BUDGET 2013


ரயில்வே பட்ஜெட் 2013
அனுபூதி, ஷதாப்தி,சம்பார்க் க்ரந்தி, கரீப் ரத், ராஜ்தானி, ஜன்ஷதாப்தி - என இந்தியில் இஷ்டதுக்கு பெயர் வைத்துக்கொள்ளும் இந்த அரசு,
பல்லவன், கம்பன், சோழன் என ரயில்களின் தமிழ்ப் பெயர்களை மறைத்து எல்லா ரயில்களையும் சென்னை எக்ஸ்பிரஸ் என முட்டாள்தனமாய் பெயரிட்டது ஏன்?
Read "All trains go to Chennai" in www.tnrailways.blogspot
---------------------------------------------------------
மீட்டர் கேஜ் பாதையில், பல வருடங்களுக்கு முன்பு இயங்கிய சென்னை-பழனி (காமாட்சி வண்டி) , சென்னை-காரைக்குடி (கம்பன்), சென்னை-தஞ்சாவூர், (ஃபாஸ்ட் பாசஞ்சர்), சென்னை-திருவாரூர் (வேளாங்கன்னி) வண்டிகளை
புது வண்டிகள் என சொல்லலாமா?
அண்ணா...போன வருடம் (2012) சொன்ன சென்னை-பெங்களூர் டபுள் டெக்கர் என்ன ஆச்சு?
-------------------------------------------------
இந்த வருடம் 67 புதிய வண்டிகள் . 50 வாராந்திர ரயில்கள்  & 17 ரயில்கள் அகலப்பாதை பணிகள் முடிந்த பிறகு?
அகலப்பாதை பணிகள் முடியவே 10 வருஷம் ஆகுமே?
Read "Gauge Conversion Projects in TamilNadu" at www.tnrailways.blogspot
-------------------------------------------
இந்திய அரசு உதவியுடன் இலங்கையில் இந்துருவா-காலி புது ரயில்பாதை. மேலும் இந்தியா 500 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்தது. - செய்தி.
தமிழ்நாட்டுக்கு அகலப்பாதை பணிகள் - இந்த வருடம் நிதி ஒடுக்கீடு கிடையாது.
நமக்கென்ன ? கிரிக்கெட் போட்டி பார்த்து பொழுதை ஓட்டுவோம்!

வேகமும் விவேகமும் TAMILNADU NEW TRAINS


வேகமும் விவேகமும்

ரயில்
தூரம் (கி.மீ)
பயண நேரம்
சென்னை-தூத்துக்குடி  முத்துநகர் விரைவுவண்டி
650
12
சென்னை- நெல்லை விரைவுவண்டி
650
12
சென்னை-கன்னியாகுமரி விரைவுவண்டி
750
14
சென்னை-தென்காசி பொதிகை விரைவுவண்டி
700
13
சென்னை- நாகர்கோவில் விரைவுவண்டி
700
13
சென்னை-ராமேஸ்வரம் சேது விரைவுவண்டி
600
11

உங்களுக்கு இந்த அட்டவணை மூலம் ஏதும் புரியாவிட்டால் www.tnrailways.blogspot  சென்று பார்க்கவும். வேகமும் விவேகமும்




மேலே அட்டவணையில் உள்ள வண்டிகள் எல்லாமே மணிக்கு 55 கி.மீ வேகத்தில் பயணம் செய்கின்றனஒரு வண்டியை தவிர மற்ற எல்லா வண்டிகளுக்கும் அதிவிரைவு கட்டணம் ரூ. 30 அதிகப்படியாக வசூல் செய்கிறது ரயில்வே.
அந்த ஒரு வண்டி---- ராமேஸ்வரம்  சேது ரயிலுக்கு மட்டும் இந்த அதிவிரைவு கட்டணம் ரூ. 30 அதிகப்படியாக வசூல் செய்யப்படுவது இல்லை. ஏன் இந்த கரிசனம்? இந்த ரயிலில் வடநாட்டு பக்தர்கள் செல்வதால் இவ்வளவு கரிசனம்.
நம் மக்கள் சேது விரைவுவண்டியை பயன்படுத்த முடியாதபடி நேர அட்டவணை உள்ளது. ஊரும் , சேரும் நேரமும் கீழே உள்ளன :
காரைக்குடி       நள்ளி ரவு 12.30
சிவகங்கை                1.20
மானாமதுரை         1.50
பரமக்குடி                 2.20
ராமனாதபுரம் அதிகாலை   3.00

இப்படி நள்ளிரவு நேரத்தில் குடும்பத்துடன் போய் இறங்கி , நாம் ஏன் தவிக்க வேண்டும்? சேது ரயில் மாலை 5 மணிக்கு பதிலாக இரவு 7 மணிக்கு கிளம்பினால் எல்லோருக்கும் நன்றாக இருக்கும். ஆனால், வடநாட்டு பக்தர்களின் வசதிதானே முக்கியம்.

சேது ரயிலில் சிவகங்கை மாவட்டதிற்கு (காரைக்குடி, தேவக்கோட்டை, சிவகங்கை, மானாமதுரை) 60 சீட்டுகளே ஒதுக்கப்பட்டுள்ளது. மீதி 350 சீட்டுக்களும் பரமக்குடி,. ராம்நாதபுரம் & ராமேஸ்வரம் மக்களுக்கு!     சேது ரயில் பரமக்குடி,. ராம்நாதபுரம் ஊர்களுக்கு அகால நேரத்தில் செல்வதால், ராமேஸ்வரம் பக்தர்களே பயன் பெருகின்றனர்.
அதே போல் ராமேஸ்வரம்-சென்னை (6702) வண்டியில் 60 சீட்டுகள் மட்டுமே தாம்பரம் வரை ஒதுக்கப்பட்டு, மீதி 350 சீட்டுகள் எழும்பூர் வரை ஒதுக்கப்பட்டுள்ளது.. இது மேலோட்டமாய் பார்த்தால் பெரிய விஷயமாய் தெரியாது. ஆனால் வடநாட்டு பயணிகள் அனைவரும் எழும்பூர் சென்றே, சென்ட்ரலில் ரயில் ஏறுவார்கள். (எந்த வடநாட்டானும் செங்கல்பட்டில் இறங்கி சென்ட்ரல் செல்ல மாட்டான்). அவர்கள் வசதிக்குதான் இப்படி ஒதுக்கீடு செய்துள்ளது இந்திய அரசு.
தமிழர்கள்? ரூ.100 அதிகம் செலுத்தி தட்கல் (அரசாங்கமே விற்கும் பிளாக் டிக்கெட்) மூலம் பயணம் செய்து கொள்ளலாம்.
----------------------------------------------------------

பழனி மொட்டை யாருக்கு? PALANI NEW TRAIN


பழனி மொட்டை யாருக்கு?
இந்த வருட ரயில்வே பட்ஜெட்டிலும் தமிழ்நாட்டுக்கு மொட்டைதான். 1000 கி.மீ வரை அகலப்பாதை ஆக வேண்டிய மீட்டர் கேஜ் பணிகளுக்கு இந்த வருடம், நிதி ஏதும் ஒதுக்கப்படவில்லை..
அகலப்பாதை பணிகளால் பாதிப்படைந்த ரயில்கள் பட்டியலைதான் இந்த அட்டவணையில்  தரப்பட்டுள்ளது.
பழனி, தென்காசி, திருசெந்தூர், நாகூர், காரைக்கால், அருப்புக்கோட்டை - என எல்லா ஊர்களின் பணிகளும் 10 வருடத்துக்கு மேல் தேங்கி நிற்க, ராமேஸ்வரம் மட்டும் எப்படி முன்னுரிமை பெற்றது? காரணம் இந்த ரயிலை வடநாட்டு மக்கள் அதிகம் பயன்படுத்துகின்றனர்.
சென்னை-ராமேஸ்வரம் விரைவுவண்டியின் வழித்தடம் (வழியை மாற்றியாவது வடநாட்டு பக்தர்களுக்கு சேவை செய்தது இந்திய அரசு)
1996 வரை - சென்னை, திருச்சி, காரைக்குடி,மானாமதுரை
விழுப்புரம்-திருச்சி பணிகள் ஆரம்பம் ஆனதும்,
2003 வரை - சென்னை, தஞ்சாவூர், காரைக்குடி,மானாமதுரை
கும்பகோணம்-தஞ்சாவூர் பணிகள் ஆரம்பம் ஆனதும்,
2006 வரை - சென்னை, திருவாரூர், காரைக்குடி,மானாமதுரை
2007-ம் ஆண்டு மானாமதுரை-ராமேஸ்வரம் (150 கி.மீ) பணிகள் 1 வருடத்தில் முடிக்கப்பட்டன. (150 கி.மீ திருச்சி-நாகூர் பணிகள் 1996 முதல் 2009 வரை 13 வருடங்கள் நடந்தன.) இந்த வருடம் மட்டும்தான் ராமேஸ்வரம் ரயில் இயங்கவில்லை.
2008 முதல் சென்னை, திருச்சி, மதுரை,மானாமதுரை வழியாக ராமேஸ்வரம் ரயில் இயக்கப்பட்டது.
திருச்சி-புதுக்கோட்டை-காரைக்குடி-மானாமதுரை பணிகள் 2008 முதல் 2010 வரை நடந்து முடிந்தன. 2010 முதல் இந்த பாதையில் ராமேஸ்வரம் ரயில் செல்கிறது.
இந்த ரயிலில் வடநாட்டு பக்தர்கள் செல்வதால் இவ்வளவு கரிசனம். தென்னாட்டு பக்தர்களுக்கு  வேறென்ன - மொட்டைதான் .
அவர்கள் 1 வருடம் காத்திருந்தார்கள். நமது காத்திருப்பு 15 வருடங்கள்.****************