Monday 28 January 2013

விஸ்வரூப ஆசைகள்



                     விஸ்வரூப ஆசைகள்
1980ல் வெளிவந்த படத்தின் பெயரும் ’விஸ்வரூபம்  ’தான் என்று பலருக்கு தெரிய வாய்ப்பில்லை. படத்தின் தலைப்பைக் கூட சுயமாக யோசிக்க முடியாதவர்களின்  சமீப சேட்டைதான் இஸ்லாமியர்      க்கு     எதி ரான ‘வி      ஸ்வரூபம்’.
சோ ராமசாமி (முகமது பின் துக்ளக்), மணிரத்னம் (பம்பாய்), .ஆர்.முருகதாஸ் (துப்பாக்கி) வரிசையில் மற்றுமொரு முஸ்லிம் எதிர்ப்புப் படம்தான் விஸ்வரூபம்.
இஸ்லாமியர்க்கு எதிராக படம் செய்து அகில இந்திய & சர்வதேச சினிமா மார்க்கெட்டில் படத்தை போணி செய்யும் உத்திதான் இந்த சினிமா வியாபாரிகளின் நோக்கம். இவர்களின் பண ஆசைக்கு தமிழ்நாடு ஏன் பலிகடா ஆக வேண்டும்?
இங்கு தமிழரிடையே இந்து-முஸ்லிம் பேதம் கிடையாது. தமிழர்கள் இந்து என்றால் இலங்கையில்  2 லட்சம் தமிழரை டில்லி ராஜாங்கம் அழித்திருக்குமா
இந்து தீவிரவாதம் (பாபர் மசூதி இடிப்பு), கிறிஸ்துவ தீவிரவாதம் (ஆப்கான் போர்), யூத தீவிரவாதம் (பாலஸ்தீன போர்), பவுத்த தீவிரவாதம் (ஈழத்தமிழர் படுகொலை) என தீவிரவாதம் எல்லா மதத்திலும் பரவிக் கிடக்க ஏன் இஸ்லாமியர்க்கு மட்டும் ’  தீவிரவாதிகள்’ எனும் பட்டம்?
இந்து-முஸ்லிம் பேதம் உள்ள வட இந்தியாவில் படத்தை ‘டப்’ செய்து காசு பார்க்கத் துடிக்கும் வியாபாரிகளின்  பேராசைக்காக தமிழ்நாட்டில் ஏன் பிளவு ஏற்படுத்த வேண்டும்? வட இந்திய ரசிகர்களுக்காக இந்தி நடிகைகள் (காஜல் அகர்வால், மனிஷா கொய்ராலா, பூஜா பட்) இந்தி பாடகர்கள் (சுக்விந்தர் சிங், உதித் நாரயண், ஷ்ரேயா கோஷல், சாதனா சர்கம்) என தரம் தாழ்த்திக் கொண்ட தமிழ் திரையுலகத்தின் அடுத்த வீழ்ச்சிதான் வட இந்தியாவுக்காக கதை பண்ணுவது (பம்பாய், துப்பாக்கி, உயிரே, ரோஜா, ஹே ராம் ……….. விஸ்வரூபம்).
இவர்கள் படம் அமெரிக்காவிலும், ஐரோப்பாவிலும் காசு பண்ண நமது தமிழ்நாட்டில் ஏன் பிரிவினையைத் தூண்ட வேண்டும்? அந்த நாட்டு மக்களை குஷிப்படுத்த நாங்களா பலிகிடாவாக கிடைத்தோம்? ஐரோப்பிய சர்வதேச படவிழாக்களில் படம் தேர்வாக வேண்டி நம் தமிழ் சமுதாயத்தை பிளவு படுத்த வேண்டாமே!
தீவிரவாதம் குறித்து வரும் படங்களை தமிழ்நாடு அரசு தடை செய்ய வேண்டும். அல்லது தமிழ்நாடு அரசின் முன் அனுமதி (கதையை பரிசீலித்த பின்னர் படப்பிடிப்பு ) பெற்ற பின்னர் படம் எடுக்க சட்டம் இயற்ற வேண்டும். அதே போல் ஆபாசம், தீவிரவாதம் போன்ற கதையம்சம் கொண்ட இந்திப் படங்களையும் தமிழ்நாட்டில் தடை செய்ய வேண்டும்.

No comments:

Post a Comment