Thursday 7 March 2013

பழனி மொட்டை யாருக்கு? PALANI NEW TRAIN


பழனி மொட்டை யாருக்கு?
இந்த வருட ரயில்வே பட்ஜெட்டிலும் தமிழ்நாட்டுக்கு மொட்டைதான். 1000 கி.மீ வரை அகலப்பாதை ஆக வேண்டிய மீட்டர் கேஜ் பணிகளுக்கு இந்த வருடம், நிதி ஏதும் ஒதுக்கப்படவில்லை..
அகலப்பாதை பணிகளால் பாதிப்படைந்த ரயில்கள் பட்டியலைதான் இந்த அட்டவணையில்  தரப்பட்டுள்ளது.
பழனி, தென்காசி, திருசெந்தூர், நாகூர், காரைக்கால், அருப்புக்கோட்டை - என எல்லா ஊர்களின் பணிகளும் 10 வருடத்துக்கு மேல் தேங்கி நிற்க, ராமேஸ்வரம் மட்டும் எப்படி முன்னுரிமை பெற்றது? காரணம் இந்த ரயிலை வடநாட்டு மக்கள் அதிகம் பயன்படுத்துகின்றனர்.
சென்னை-ராமேஸ்வரம் விரைவுவண்டியின் வழித்தடம் (வழியை மாற்றியாவது வடநாட்டு பக்தர்களுக்கு சேவை செய்தது இந்திய அரசு)
1996 வரை - சென்னை, திருச்சி, காரைக்குடி,மானாமதுரை
விழுப்புரம்-திருச்சி பணிகள் ஆரம்பம் ஆனதும்,
2003 வரை - சென்னை, தஞ்சாவூர், காரைக்குடி,மானாமதுரை
கும்பகோணம்-தஞ்சாவூர் பணிகள் ஆரம்பம் ஆனதும்,
2006 வரை - சென்னை, திருவாரூர், காரைக்குடி,மானாமதுரை
2007-ம் ஆண்டு மானாமதுரை-ராமேஸ்வரம் (150 கி.மீ) பணிகள் 1 வருடத்தில் முடிக்கப்பட்டன. (150 கி.மீ திருச்சி-நாகூர் பணிகள் 1996 முதல் 2009 வரை 13 வருடங்கள் நடந்தன.) இந்த வருடம் மட்டும்தான் ராமேஸ்வரம் ரயில் இயங்கவில்லை.
2008 முதல் சென்னை, திருச்சி, மதுரை,மானாமதுரை வழியாக ராமேஸ்வரம் ரயில் இயக்கப்பட்டது.
திருச்சி-புதுக்கோட்டை-காரைக்குடி-மானாமதுரை பணிகள் 2008 முதல் 2010 வரை நடந்து முடிந்தன. 2010 முதல் இந்த பாதையில் ராமேஸ்வரம் ரயில் செல்கிறது.
இந்த ரயிலில் வடநாட்டு பக்தர்கள் செல்வதால் இவ்வளவு கரிசனம். தென்னாட்டு பக்தர்களுக்கு  வேறென்ன - மொட்டைதான் .
அவர்கள் 1 வருடம் காத்திருந்தார்கள். நமது காத்திருப்பு 15 வருடங்கள்.****************

No comments:

Post a Comment